திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் மாநிலத்தில் பாஜக வெற்றி கணக்கைத் தொடங்கியுள்ளது.
திருச்சூர் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி, 4 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஏறத்தாழ 75 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில், சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக கேரளாவில் பாஜக தடம் பதித்துள்ளது.
திருச்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வழக்கறிஞர் சுனில்குமார் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 2-ஆம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் 3 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்தனர்.
திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் காலை முதலே காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். பின்னர் பிற்பகலில் சசிதரூர் முன்னிலை பெற்றார்.