சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சுடுகாடு பகுதியில் மின்விளக்கு இல்லாததால் தீப்பந்தத்துடன் இறந்தவரின் உடலை தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாழங்குப்பத்தைச் சேர்ந்த தர்மா என்பவரின் உடலை எண்ணூரில் உள்ள சுடுகாட்டிற்கு தகனம் செய்வதற்காக இரவு 7 மணிக்கு மேல் உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அப்போது, தகனம் செய்யும் இடத்தில் மின் விளக்கு இல்லாததால் அதிர்ச்சி அடைந்து உறவினர்கள், செல்போன் டார்ச் மற்றும் தீப்பந்தம் ஏற்றி அவர் உடலை அடக்கம் செய்த அவலநிலை ஏற்பட்டது.