ஈரோடு மாவட்டம், பழையபாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பழையபாளையத்தில் உள்ள கடைக்கு வாங்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநரை கைது விசாரணை மேற்கொண்டனர்.