விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துப்பாண்டி, அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், முத்துப்பாண்டியை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.