இந்தியப் பொதுத்தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவில், இந்தியாவில் 3வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள பாஜக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இருநாட்டு நலன்களை முன்னேற்ற ஒருங்கிணைந்து செயல்பட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.