உலகக்கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
பார்படோஸ் நாட்டின் பிரிட்ஜ்டவுண் பகுதியில் டி20 உலகக்கோப்பைக்கான 6-வது லீக் ஆட்டம் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
அப்போது 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதனால் போட்டி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.