இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வலுவான வெற்றியாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பார்ப்பதாக இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ஃப்ரெடி ஸ்வேன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்திய ஜனநாயகம் வலுவாக உள்ளதா என்ற சந்தேகங்கள் அனைத்தும் தற்போது நீங்கியுள்ளது என குறிப்பிட்டார்.
இந்திய மக்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பார்களோ அவர்களுடன் டென்மார்க் இணைந்து பணியாற்றும் என குறிப்பிட்டுள்ள அவர், பிரதமர் மோடியுடன் ஒரு சகாப்தம் பணியாற்றியது சிறப்பான அனுபவம் என கூறினார்.
3வது முறையாக மோடி பிரதமராக வரவுள்ளதால் பாஜகவின் 100 திட்டங்களை செயல்படுத்த டென்மார்க் உறுதுணையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.