செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அண்ட வெடிப்பை இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்மூலம் விண்மீன்கள் வெடித்துச் சிதறும் சூப்பர்நோவா நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்பதை விண்வெளி வீரர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
இந்த சூப்பர்நோவா வெடிப்பு நிகழும் நேரத்தில் வெளிப்படும் ஆற்றல், சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் வெளியிடும் ஆற்றலுக்கு சமம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.