புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்துள்ள அழகியநாச்சி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மேதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தேரில் அழகிய நாச்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.