திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் தங்கள் பகுதி மக்களின் வாழ்வாதரத்தை முதலமைச்சர் காக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஊத்து என்ற மலை பகுதியில் 11 வது வார்டு கவுன்சிலராக ஸ்டாலின் என்பவர் பணியாற்றுகிறார். இந்நிலையில் ஸ்டாலின் தன் குடியிருப்பு மக்கள் சார்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை நம்பி மக்கள் உள்ளதாகவும், தற்போது காப்புக்காடாக இப்பகுதி அறிவிக்கப்பட்டதால் நிர்பந்த அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார், இது குறித்த தமிழக முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் தெரிவித்திருந்தார்.