புதுக்கோட்டையில் உள்ள நொண்டி அய்யா கோயிலில் மது எடுப்பு திருவிழாவை ஒட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 51 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
வெற்றிபெற்று முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.