மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் , சுமார் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக உள்ளதாகவும், அனைத்து கட்சிகளுடன் தாங்கள் தொடர்பில் உள்ளதாகவும் கூறினார்.
என்டிஏ புதிய கூட்டணி அல்ல என்றும், தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார். என்டிஏவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் கிஷ்ன் ரெட்டி தெரிவித்தார்.