அன்னூரில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதன் காரணமாக அன்னூர் கோவன் குளம் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து அன்னூர், புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.