தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக முதல்முறையாக டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இதில் திமுக வேட்பாளர் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2 லட்சத்து 92 ஆயிரத்து 669 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 1 லட்சத்து 55 ஆயிரத்து 587 வாக்குகள் மட்டுமே எடுத்து டெபாசிட்டை இழந்தார். தேனி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.