பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பேங்க் ஆஃப் இங்கிலாந்து வெளியிட்டுள்ள இந்த கரன்சி நோட்டுகள், உடனடியாக புழக்கத்துக்கு வந்துள்ளன.
அதேவேளையில், மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் உருவம் பொறித்த கரன்சிகளை பயன்படுத்துவதில் எந்தத் தடையுமில்லை என்றும், படிப்படியாக பழைய கரன்சி நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சிகள் புழக்கத்துக்கு வரும் என்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.