ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸை சந்தித்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
பிஜூ ஜன தளம் கட்சி 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆளுநரை சந்தித்த ஒடிசா முதலவர் நவீன் பட்நாயக் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
ஒடிசாவில் கடந்த 2000 ஆண்டு முதல் பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.