ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களிடன் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில் முல்லை பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.