பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகர் அருகே உள்ள சஞ்சாடி நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மீத்தேன் வாயு கசிந்ததில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 11 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.