ஒரே விமானத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் பயணித்தது பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டது.
மக்களவைத் தேர்தலில் இருவரும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்ட நிலையில், தங்களது கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது நிதிஷ்குமாரின் பின் இருக்கையில் அமர்ந்து தேஜஸ்வி யாதவ் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.