பாலஸ்தீனத்தை இறையாண்மைமிக்க தனிநாடாக ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா அங்கீகரித்துள்ளது.
இதையொட்டி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.
ஏற்கெனவே ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனிநாடாக கடந்த வாரம் அங்கீகரித்த நிலையில், தற்போது ஸ்லோவேனியாவும் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.