தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிப்பதில் உறுதியாக உள்ளதாக தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாய கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்வதாக தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற பிரதமர் மோடி, மற்றும் பவன் கல்யாணுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி 45%, வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தாக கூறினார்.
மிகபெரிய ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். அரசியலில் ஏற்ற தாழ்வு சகஜம் என்று கூறிய சந்திரபாபு நாடு, வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் வெளியேற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் என்றும், வெளிநாட்டில் இருந்து கூட தங்கள் சொந்த ஊர்களுக்கு பலர் வாக்களிக்க வந்ததாகவும் கூறினார்.
ஜெகன் மோகன் ஆட்சியில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஊடகங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.