உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.