போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனியாண்டவர் கோயிலில் சுவாமியின் திருவுருவ சிலையை போக சித்தர் உருவாக்கியதாகவும் , அவர் பிறந்த நட்சத்திர தினத்தை போகர் ஜெயந்தியாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போகர் ஜெயந்தி தினத்தை ஒட்டி பழனி மலைக் கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்பாள் சமேத மரகதலிங்கம் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
இதையடுத்து மேளதாளத்துடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதணை சுவாமிக்கு காட்டப்பட்டது.