திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டு காளியம்மன் கோயிலில் வைகாசி விழாவையொட்டி பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடந்த பூக்குண்டம் இறங்கும் நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.