மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்களைத் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக தமிழகத்தில் 11.24 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக திமுக 26.93 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக அதிமுகவுக்கு 20.46 சதவீதம் வாக்குகளும், பாஜகவுக்கு 11.24 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 10.67 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
நாம் தமிழர் கட்சி 8.1சதவீதமும், தேமுதிக 2.59 சதவீதமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.52 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் 2.15 சதவீதமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.17 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.