பிரிட்டன் பொதுத்தேர்தலையொட்டி, பிரதமர் ரிஷி சுனக், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டார்மர் இடையே தொலைக்காட்சியில் நேரடியாக காரசார விவாதம் நடைபெற்றது.
பிரிட்டன் பொதுத்தேர்தல் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பொருளாதார மேம்பாடு தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டார்மரும் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர்.
அப்போது, பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்தால் வரிச்சுமையை பொதுமக்கள் மீது திணித்துவிடுவர் என ரிஷி சுனக் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டார்மர், கடந்த 14 ஆண்டுகளாக பிரிட்டன் பொருளாதாரத்தை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சீர்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.