டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் மாளிகை சென்ற மோடி, அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் வழங்கினார்.
புதிய ஆட்சி அமையும் வரை, இடைக்கால காபந்து பிரதமராக மோடி நீடிக்க வேண்டும் என குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் குடியரசு தலைவரை சந்தித்தனர்.
இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.