நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
35 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 20.46 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கு அந்த கட்சி தள்ளப்பட்டுள்ளது.
தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி,வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு பின்,மக்களவையில் அ.தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராணி 5,267 வாக்குகள் பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.