ராசிபுரத்தில் போலி தங்க நாணயங்களை கொடுத்து 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பத்மாவதி துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவரோடு பணியாற்றிவந்த சேட்டு என்பவர், குறைந்த விலையில் தங்க நாணயங்களை கொடுப்பதாக ஆசை காட்டியுள்ளார்.
இதனையடுத்து, 20 லட்சம் ரூபாய் கொடுத்து தங்க நாணயங்களை வாங்கிய பத்மாவதி அதனை சோதனையிட்டுள்ளார். அப்போது அவை போலி என தெரியவந்தது.