வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆம்பூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கோயில் திருவிழாவிற்காக தமது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது பேரணாம்பட்டு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இருந்த புளியமரத்தின் மீது மோதியது.
இதில், தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்.