தமிழகத்தில் அதிகபட்சமாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகளும், குறைந்தபட்சமாக, கன்னியாகுமரியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.
39 தொகுதிகளிலும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக நோட்டாவுக்கும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வரை நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.
“நோட்டாவை தவிர்த்து, இருப்பதிலேயே சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.