டெல்லியில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் நிலையில், சஞ்சய் கேம்ப் பகுதியில், பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடித்தனர்.
மேலும், குறித்த நேரத்தில் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை என்றும், அப்படி வழங்கும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டினர்.