தென் அமெரிக்காவில் முதன்முறையாக பெரு நாட்டில் யுபிஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதையொட்டி, இந்தியாவின் என்பிசிஐ என்ற இணையவழி பணப் பரிவர்த்தனை அமைப்பானது, தென் அமெரிக்க மத்திய வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சர்வதேச அளவில் நமீபியா வங்கிக்கு அடுத்தபடியாக பெரு நாட்டுடன் யுபிஐ தொழில்நுட்பம் தொடர்பாக என்பிசிஐ அமைப்பு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.