மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை என பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தங்கர் பச்சான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களின் தீராத பிரச்சினைகளை தீர்க்கவே தேர்தல் களம் கண்டேன் என கூறினார்.
தனது மொழி, மண், இனத்திற்கு எந்த சிக்கல் வந்தாலும் போராடுவேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்