திருப்பத்தூரில் பழைய துணி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ஆம்பூர் கஸ்பா வளையக்கார வீதியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின்பேரில் விரைந்த வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் குடோனின் மேல்மாடியில் சிக்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
எனினும், இந்த விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பழைய துணிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.