கோவில்பட்டி அருகே காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மந்தித்தோப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது, அதில் 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நெல்லை கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.