உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறாதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி ஹர்நாத்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப்பிரதேச மாநில வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்ததாகவும், எனினும் அங்கு வெற்றி சதவீதம் குறைந்ததாக தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் என்ன தவறு நடந்தது, கட்சி வேட்பாளருக்கு எதிராக பணியாற்றியது யார் என்பது குறித்து தலைமை விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஹர்நாத்சிங் கேட்டுக்கொண்டார்.