வைகாசி மாத அமாவாசை ஒட்டி, ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலுள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்கள் திதி கொடுப்பது வழக்கம், அந்த வகையில் வைகாசி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
அப்போது முன்னோர்களுக்காக திதி கொடுத்து பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவை கொடுத்தனர். பின்னர் புன்னிய தீர்த்தங்களில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.