தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகும் வீடியோ வலைதளத்தில் பரவி வருகிறது.
புளியங்குடி பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்து, பாதுகாப்பற்ற முறையிலும், மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்காசியில் பலத்த மழை பெய்த போது அரசுப்பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியது, இதனால் பயணிகள், முதியோர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
இந்நிலையில் இது போன்ற பேருந்துகளை அரசு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.