சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி திருச்சி ரயில்வே கோட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்த இந்தப் பேரணியில் தண்டவாளத்தை கடப்பது, கேட்டின் கீழ் பகுதியில் கடந்து செல்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கியில் நடைபெற்ற இந்த பேரணியில் ரயில்வே ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.