திருப்பத்தூரில் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
சூளகிரி பகுதியில் இருந்து கொத்தமல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி அதை வேலூருக்கு இறக்கிவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சாதிக் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.