சக்கர நாற்காலி வழங்க கோரி புதுச்சேரிக்கு அரசுக்கு மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்த ஜெயக்குமார் மங்களம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இவரது தொகுதியில் வசிக்கும் தந்தையை இழந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் அம்பிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பின்றி வீட்டியிலேயே முடங்கியுள்ளதாகவும், கடந்த 4 வருடமாக ஜன்னல் வழியாகவே உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சக்கர நாற்காலி கேட்டு சமூக நலத்துறையில் விண்ணப்பித்தும், அதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.