குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சந்தித்து புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலை அளிக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்.
சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். அப்போது 18வது மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பட்டியலை அவர்கள் வழங்குகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ள கட்சியை குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.