திருச்செந்தூர் கடற்கரையில் பெண் ஒருவர் தவறவிட்ட தங்க நகையை கண்டுபிடித்து கொடுத்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வந்த ப்ரியா என்கிற பெண் பக்தர் கடலில் நீராடினார்.
அப்போது அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் செயின் காணாமல் போனது. இந்நிலையில் மாயமான தங்க செயினை கடற்கரை பாதுகாப்பு பணியாளர் கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைத்தார்.