பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிறந்தநாளையொட்டி அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வானதி சீனிவாசன், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணி தொடரவும், அவரது எண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேறவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.