பிரதமராக பதவியேற்கவுள்ள மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடியை தொலைபேசியில் கொண்டு பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நட்புறவு நாடுகள் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வளர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.