கங்கனா ரணாவத்தை தாக்கிய பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து வெளியே வந்தவுடன், சிஐஎஸ்எஃப் பெண் காவலர் தனது முகத்தில் அடித்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்ததால் தான் தாக்கியதாக பெண் காவலர் கூறியதாக கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.