ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து, தனது சகோதரர் சீரஞ்சிவியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக, தனது சகோதரரும், நடிகருமான சிரஞ்சீவியின் வீட்டில், தனது குடும்பத்துடன் பவன் கல்யாண் கேக் வெட்டி கொண்டாடினார்.