பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவலை 10 ஆம் தேதி வரை நீட்டித்து பெங்களூரூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் 6 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஜூன் 10ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. . ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு மே 31ஆம் தேதி கைது செய்தது.