கேதார்நாத் சார் தாம் யாத்திரைக்கு இதுவரை 7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோயிலில் தொடங்கி உயரமான பகுதியில் அமைந்துள்ள கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோயில்களுக்கு செல்வதே சார் தாம் யாத்திரையாகும்.
ஆண்டு தோறும் கோடைகாலத்தில் யாத்ரீகர்கள் சாம் தாம் புனித யாத்திரைக்கு செல்வது வழக்கம்.
நடப்பாண்டுக்கான புனித யாத்திரை கடந்த மாதம் 10ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 698 பேர் சார் தாம் புனித யாத்திரைக்கு வருகை தந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.